”விஜய் மக்களை ரோட்டில் விட்டுவிட்டு போயிட்டார். மக்களுக்காக நிற்கலை. இதிலிருந்தே தெரிகிறது அவர் டைம்பாஸ் பாலிடிக்ஸ் பண்ணுகிறார் என்பது – நடிகை ரோஜா” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது. அதில், நடிகையும் அரசியல்வாதியுமான ரோஜா செல்வமணி தவெக தலைவர் விஜய் டைம் பாஸ் அரசியல் செய்வதாகவும், மக்களை நடுத்தெருவில் நிறுத்திச் சென்றதாகவும் பேசியதாக கூறி இதனை பரப்பி வருகின்றனர்.
Fact Check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் ரோஜா பவன் கல்யாண் குறித்து பேசியதை திரித்து பகிர்ந்து வருகின்றனர் என்று தெரியவந்தது.
வைரலாகும் காணொலியின் உண்மை தன்மையை கண்டறிய தொடர்பாக யூடியூபில் கீவரட் செட் செய்து பார்த்தோம் அப்போது கடந்த ஜூலை 08ஆம் தேதி புதியதலைமுறை ஊடகம் வைரலாகும் காணொலியின் முழுமையான பதிவை “Drama Artist பவன் கல்யாண்…” – ரோஜா கடும் விமர்சனம் | Pawan Kalyan” என்ற தலைப்பில் பதிவிட்டுள்ளது.
அதில் ஆந்திர அரசியல் சூழல் குறித்தும் பவன் கல்யாண் பற்றிய கேள்விகளுக்கும் அவர் பதிலளித்திருந்தார். தொடர்ந்து, பவன் கல்யாண் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “அவர் டைம் பாஸ் அரசியல் செய்கிறார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, என்.டி.ஆர் ஆகியோரும் சினிமாவில் இருந்து வந்தவர்கள்தான். ஆனால், மக்களுக்காக உழைத்தார்” என்று பேசியிருந்தார்.
மேலும், இது தவெக விஜய்க்கும் பொருந்துமா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, “ஆந்திராவில் சிரஞ்சீவி கட்சி ஆரம்பித்தார். ஆனால், திடீர் என்று அந்த கட்சியை எடுத்துச் சென்று காங்கிரஸில் இணைத்துவிட்டார். அவரை நம்பி வந்தவர்களை நடுத்தெருவில் நிறுத்திவிட்டார். பவன் கல்யாணும் அதே போன்று கட்சி ஆரம்பித்தும் எந்த தேர்தலுக்கும் செல்லவில்லை. அதனால், விஜய் சார்க்கு நான் சொல்வது அவர்கள் மாதிரி இல்லாமல், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, என்.டி.ஆர் போன்று மக்கள் நம்மை நம்பும்போது அவர்களுக்காக போராட வேண்டும்” என்று கூறுகிறார்.
Conclusion:
முடிவாக, நம் தேடலில் தவெக தலைவர் விஜய் டைம் பாஸ் அரசியல் செய்வதாக நடிகையும் அரசியல்வாதியுமான ரோஜா செல்வமணி கூறியதாக வைரலாகும் காணொலி தவறானது என்றும் உண்மையில் அவர் பவன் கல்யாண் குறித்து அளித்த பதிலை திரித்து தவெக தலைவர் விஜய் குறித்து விமர்சித்ததாக பரவி வருகிறது.