பிரதமர் நரேந்திர மோடி சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்றார். அங்கு அதே மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்திருந்தார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின். அப்போது, புடினின் காரில் பிரதமர் மோடி மற்றும் புடின் ஆகிய இருவரும் ஒன்றாக பயணித்தனர். இந்நிலையில், ரஷ்ய அதிபர் புடின் இந்திய தேசிய கீதம் ஒலித்த போது அதற்கு மதிப்பளிக்கும் விதமாக நின்றார் என்று சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது.
Fact Check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இக்கணொலி எடிட் செய்யப்பட்டது என்று தெரிய வந்தது.
வைரலாகும் காணொலியின் உண்மைத் தன்மை குறித்து கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம். அப்போது, ரஷ்ய யூடியூப் சேனலில் 2012ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி காணொலி ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அதன், 1:30 பகுதியில் வைரலாகும் காணொலியின் அதே பகுதி இடம் பெற்றுள்ளது.
ஆனால், அதில் இந்திய தேசிய கீதத்திற்கு பதிலாக வேறொரு இசை இசைப்பது தெரிகிறது. முதற்கட்டமாக இதனைக் கொண்டு காணொலி எடிட் செய்யப்பட்டிருப்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. தொடர்ந்து, அதில் இசைக்கப்படும் இசை என்ன என்பது குறித்து தேடியபோது அது ரஷ்யாவின் தேசிய கீதம் என்று தெரியவந்தது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்திய தேசிய கீதத்திற்கு மதிப்பளித்து நின்றதாக வைரலாகும் காணொலி எடிட் செய்யப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.