யூடியூபர் சவுக்கு சங்கர், சவுக்கு மீடியா என்ற ஊடகத்தை நடத்தி வருகிறார். இதில் பணியாற்றும் செய்தியாளர் ஒருவர் கடத்த ஏப்ரல் 26ஆம் தேதி அறந்தாங்கி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று(மே 3) எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில், பழனிச்சாமியை தகாத வார்த்தைகளால் விமர்சித்து தனது எக்ஸ் பக்கத்தில் ரீபோஸ்ட் செய்துள்ளார் சங்கர் என்றும் கண்டனம் தெரிவிப்பதை விட்டுவிட்டு, தன்னை காப்பாற்றுமாறு கூறியதாகவும் சங்கரின் பதிவு புகைப்படமாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Fact-check:
சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் புகைப்படத்தில் உள்ள பதிவு எடிட் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதன் உண்மை தன்மையை கண்டறிய சங்கரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இவ்வாறாக பதிவிட்டுள்ளாரா என்று தேடினோம். அப்போது, நேற்று (மே 3) பழனிச்சாமியின் பதிவிற்கு “நெஞ்சார்ந்த நன்றிகள் @EPSTamilNadu @AIADMKOfficial” என்று நன்றி தெரிவித்தே ரீபோஸ்ட் செய்துள்ளார்.
சவுக்கு சங்கர் எக்ஸ் பதிவு(Archive)
மேலும், எக்ஸ் தளத்தில் ஒரு பதிவு எடிட் செய்யப்பட்டிருந்தால் அப்பதிவு எடிட் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கும். அவ்வாறு சவுக்கு சங்கரின் பதிவும் எடிட் செய்யப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்ததில், எடிட் செய்யப்படவில்லை என்பது தெரியவந்தது.
அதேசமயம் தகாத வார்த்தைகளால் பழனிச்சாமியை குறிப்பிட்ட சங்கர் பதிவிட்டு இருந்தால் பல்வேறு ஊடகங்கள் அதனை செய்தியாக வெளியிட்டு இருக்கும். அதன்படி இது குறித்து கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்ததில், அவ்வாறாக எந்த ஒரு செய்தியும் வெளியிடப்படவில்லை.
Conclusion:
நம் தேடலில் முடிவாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் கண்டன பதிவிற்கு சவுக்கு சங்கர் தகாத வார்த்தைகளால் பேசி ரீபோஸ்ட் செய்து உள்ளதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.