“யோவ்… கூறு கெட்ட ஸ்டேட் பேங்க்… நீ என்ன புகழ்ந்தாலும் அந்தாளுகிட்ட இருந்து சல்லி காசு வராதுய்யா!” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் எக்ஸ் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. அவரது பதிவினை பாராட்டி எஸ்.பி.ஐ வங்கி பதிலளித்துள்ளது போன்று அதில் உள்ளது.
Fact-check:
இப்பதிவின் உண்மை தன்மையை கண்டறிய முதலில் எக்ஸ் பதிவில் உள்ள பயனர் பெயர்களை ஆய்வு செய்தோம். அப்போது, விஜய் மல்லையாவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கம் @TheVijayMallya என்ற பயனர் பெயருடன் இயங்கி வருவது தெரியவந்தது. மேலும், எஸ்.பி.ஐ வங்கியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கம் @TheOfficialSBI என்பதும் நம் ஆய்வில் தெரியவந்தது. ஆனால், வைரலாகும் பதிவில் விஜய் மல்லையாவின் பயனர் பெயர் @Vjy என்றும் எஸ்.பி.ஐ வங்கியின் பயனர் பெயர் @SBI என்றும் தவறாக இருப்பது தெரியவந்தது.
அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கங்களின் பயனர் பெயர்
மேலும், எஸ்.பி.ஐ வங்கி இவ்வாறாக விஜய் மல்லையாவின் எக்ஸ் பதிவிற்கு பதிலளித்துள்ளது தொடர்பாக செய்தி ஏதும் வெளியிட்டுள்ளதா என்று தேடுகையில் அவ்வாறாக எந்த ஒரு செய்தியும் வெளியிடப்படவில்லை என்பது தெரியவந்தது. அதே போன்று எஸ்.பி.ஐ மற்றும் விஜய் மல்லையா ஆகியோரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வைரலாகும் பதிவில் இருப்பது போன்ற பதிவு ஏதும் உள்ளதா என்று தேடியபோது அவ்வாறான பதிவு ஏதும் இல்லை என்பது தெரியவந்தது. இதன் மூலம் வைரலாகும் பதிவு எடிட் செய்யப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக தொழிலதிபர் விஜய் மல்லையாவின் எக்ஸ் பதிவினை பாராட்டி எஸ்பிஐ பதிவு வெளியிட்டுள்ளதாக வைரலாகும் எக்ஸ் பதிவு எடிட் செய்யப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.