சீருடையுடன் மாணவர்கள் சிலர் பிரம்பால் ஒருவரை ஒருவர் தாங்கிக்கொள்ளும் காணொலி சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது. அதன் கேப்ஷனில், “சென்னை, செங்கல்பட்டு மாவட்டம் தமிழ்நாட்டின் அப்பா வளர்ப்பில் பள்ளி பிள்ளைகள் கஞ்சா போதையில் ஆனந்தமாய் ஆடி பாடி மகிழ்ந்து வருகின்றனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இச்சம்பவம் செங்கல்பட்டில் நடைபெற்றது என்று பகிரப்பட்டு வருகிறது.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இச்சம்பவம் 2024ஆம் ஆண்டு பாண்டிச்சேரியில் நடைபெற்றது தெரியவந்தது.
வைரலாகும் தகவல் உண்மை தானா என்பதை கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, Thala Mahesh என்ற ஃபேஸ்புக் பயனர் வைரலாகும் அதே காணொளியை பதிவிட்டிருந்தார். அதில், “புதுச்சேரி மாநிலம் அரியூரில் நடந்த சம்பவம் ஆசிரியர்கள் மறுபடியும் பிரம்பை கையில் எடுக்க முழு சுதந்திரம் கொடுக்கனும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
தொடர்ந்து, கிடைத்த தகவலைக் கொண்டு கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2024ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம் தேதி வைரலாகும் காணொலி தொடர்பாக Indian Express Tamil செய்தி வெளியிட்டிருந்தது. அதில், “புதுச்சேரியை அடுத்த அரியூரில் இயங்கி வரும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
Indian Express Tamil வெளியிட்டுள்ள செய்தி
பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவர்கள் சாலையில், கடுமையாக ஒருவருக்கொருவர் பேசியும் கைகளால் தாக்கிக் கொண்டனர். ஒரு கட்டத்தில் மாணவர்கள் அருகில் கிடந்த விறகு கட்டையை எடுத்து சரமாரியாக தாக்கிக் கொண்ட சம்பவம் புதுச்சேரியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தற்போது, இந்த காணொலி இணையத்திலும் வைரலாக வருகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதே செய்தியை தினமலர் ஊடகமும் 2024ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது.
தினமலர் வெளியிட்டுள்ள செய்தி
Conclusion:
நம் தேடலின் முடிவாக செங்கல்பட்டு மாவட்டத்தில் கஞ்சா போதையில் மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக வைரலாகும் காணொலி 2024ஆம் ஆண்டு புதுச்சேரியில் நடைபெற்ற நிகழ்வு என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.