Fact Check: குடிப்பழக்கத்தை ஆதரித்து விளம்பரம் வெளியிட்டதா சன் டிவி? உண்மை என்ன

குடிப்பழக்கத்தை ஆதரித்து சன் டிவி விளம்பரம் வெளியிட்டதாக சமூக வலைதளங்களில் காணொலி வைரலாகி வருகிறது

By Ahamed Ali
Published on : 17 March 2025 7:37 PM IST

Fact Check: குடிப்பழக்கத்தை ஆதரித்து விளம்பரம் வெளியிட்டதா சன் டிவி? உண்மை என்ன
Claim:சன் டிவியில் குடிப்பழக்கத்தை ஆதரித்து விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது
Fact:இத்தகவல் தவறானது. வைரலாகும் காணொலி பொழுதுபோக்கிற்காக எடுக்கப்பட்டது

சன் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவர் கலாநிதி மாறனின் தந்தை முரசொலி மாறன், இவர் மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் மருமகன் வழி பேரன். சன் தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் கருணாநிதிக்கும் குடும்ப ரீதியாக தொடர்பு இருப்பதால் சன் தொலைக்காட்சி குறித்து வலது சாரியினர் அவதூறுகளை பரப்புவது வழக்கம்.

இந்நிலையில், “குடி பழக்கத்தை ஆதரித்து சன்டீவியின் விளம்பரத்தை பாருங்கள்” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது. அதில், “குடித்தால்(மது அருந்துதல்) கெட்டவன் என்று யார் சொன்னது” என்று மனைவி தனது தாயிடம் கணவர் குறித்து கூறுவது போல் காட்சி படுத்தப்பட்டுள்ளது.


வைரலாகும் பதிவு

மேலும், “என் கணவர் குடிகாரர் தான் ஆனால், கெட்டவர் கிடையாது‌. இங்கு குடிப்பவர்கள் எல்லாம் கெட்டவர்கள் இல்லை, குடிக்காதவர்கள் எல்லாம் நல்லவர்களும் இல்லை” என்று குடிப்பவர்களை நல்லவர்கள் போன்று காண்பித்துள்ளனர். இக்காணொலி, சன் டிவியில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளதாக கூறி பரப்பி வருகின்றனர்.

Fact-check:

நியூஸ் மீட்டரின் ஆய்வில் இக்கணொலி பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்பட்டது என்று தெரியவந்தது.

வைரலாகும் காணொலியின் உண்மைத்தன்மையை கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, கடந்த மார்ச் 15ஆம் தேதி வைரலாகும் அதே காணொலி The Couples Hub என்ற யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, அந்த சேனலை ஆய்வு செய்ததில் வைரலாகும் காணொலியில் இருக்கக்கூடிய பெண் மற்றும் ஆண் ஆகிய இருவரும் பல்வேறு பொழுதுபோக்கு காணொலிகளை வெளியிட்டுள்ளனர்.


மேலும், இவர்கள் இருவரும் இணைந்து நடித்த பல்வேறு பொழுதுபோக்கு காணொலிகளை அதே சேனலில் வெளியிட்டுள்ளனர். sathya_dharshan_ என்ற அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் காணொலிகளை பதிவிட்டுள்ளனர்.

வைரலாகும் காணொலியை ஆய்வு செய்ததில் விளம்பரப்படுத்தக்கூடிய எந்த ஒரு சேவையோ அல்லது பொருளோ அதில் இல்லை. இத்தகைய காணொலியை சன் டிவியில் விளம்பரம் செய்ய எந்த ஒரு முகாந்திரமும் இல்லை. மேலும், காணொலியில் பெண்ணின் தாயார் பேசக்கூடிய காட்சி வரும்போது அவருக்கு பின்னால் இருக்கக்கூடிய டிவியில் சன் டிவி ஒளிபரப்பாகிறது, அதன் லோகோவும் தெளிவாக தெரிகிறது. இதனைக் கொண்டு இக்காணொலி சன் டிவியில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளதாக கூறி தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

Conclusion:

நம் தேடலின் குடிப்பழக்கத்தை ஆதரித்து சன் டிவியில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி பொழுதுபோக்கிற்காக எடுக்கப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Claim Review:குடிப்பழக்கத்தை ஆதரித்து விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது சன் டிவி
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook, X
Claim Fact Check:False
Fact:இத்தகவல் தவறானது. வைரலாகும் காணொலி பொழுதுபோக்கிற்காக எடுக்கப்பட்டது
Next Story