பழைய மற்றும் புதிய மின் கட்டணத்தின் விலைப்பட்டியலுடன் கூடிய புகைப்படத்துடன், தமிழ்நாட்டில் மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
Fact-check:
சவுத்செக்கின் ஆய்வில் வைரலாகும் செய்தி 2022ஆம் ஆண்டு வெளியானது என்பது தெரியவந்தது. இதன் உண்மை தன்மையை கண்டறிய புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, வைரலாகும் அதே செய்தியை கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 10ஆம் தேதி பாலிமர் நியூஸ் (Archive) ஊடகம் வெளியிட்டிருந்தது. இரு செய்தியில் இருக்கும் தரவுகளும் ஒன்றாக உள்ளது. இதன்மூலம் பாலிமர் நியூஸ் வெளியிட்டிருந்த செய்தியில் இருக்கும் தேதியை மட்டும் நீக்கிவிட்டு மீண்டும் தவறாகப் பரப்புகின்றனர் என்பதையும் நம்மால் அறிய முடிந்தது.
மின் கட்டண உயர்வு தொடர்பாக வெளியான செய்திகள்
மேலும், வைரலாகும் தகவல் பழையது என்று உறுதிப்படுத்தும் விதமாக, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் (Archive) வைரலாகும் செய்தி பழையது என்று நேற்று(மே 9) விளக்கப்பதிவு ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. அதில், “கடந்த சில நாட்களாக உலா வரும் மின் கட்டண செய்திகள் பற்றிய உண்மை தன்மை: அவை முற்றிலும் பழைய செய்தி. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய எண் 07 / 9.9.2022 தேதியின் படியான கட்டண விகிதம்” என்று கூறப்பட்டுள்ளது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக 2022ஆம் ஆண்டு உயர்த்தப்பட்ட மின் கட்டணம் தொடர்பான செய்தி தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.