“நீர்வள நிலவளத்திட்ட பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் வழங்கிய காபி, மிக்சர் செலவு ரூ.47 கோடி” என்ற தினகரன் நாளிதழின் செய்தி பக்கம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் திமுக ஆட்சியில் நடைபெற்றது போன்று பரப்பி வருகின்றனர்.
Fact-check:
இதன் உண்மை தன்மையை கண்டறிய இது தொடர்பாக கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2017ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் தேதி தினகரன் (Archive) செய்தி வெளியிட்டுள்ளது. அதில், “நீர்வள நிலவளத்திட்ட பணியை ஆய்வு செய்யவும், கூட்டம் நடந்தபோது வழங்கிய காபி, மிக்சர் உள்ளிட்ட செலவுகள், அறிக்கை தயாரிக்க ஆன செலவு மட்டும் ரூபாய் 47 கோடி என்று தமிழக பொதுப்பணித்துறை அறிக்கை தாக்கல் செய்தது. இந்த அறிக்கையை பார்த்த உலக வங்கி அதிர்ச்சி அடைந்துள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்நிகழ்வு 2017ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நடைபெற்றது என்று தெரியவந்தது.
மேலும், 2018ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் எக்ஸ் தளத்தில் வைரலாகும் தினகரனின் செய்தியை பதிவிட்டு, “நீர்வளத் திட்டப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டங்களுக்கான காபி, மிக்சர் செலவு ரூ.47 கோடி: செய்தி - நமது ஆட்சியாளர்கள் என்ன செய்கிறார்கள் என்பது இப்போது தெரிகிறதா? முழுநேரமும் இதே வேலையாக இருந்தால் இவ்வளவு செலவு ஆகாதா?” எனக் கூறியுள்ளார்.
Conclusion:
நம் தேடலின் முடிவாக நீர்வள நிலவளத்திட்ட பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் வழங்கப்பட்ட காபி, மிக்சருக்கான செலவு ரூ.47 கோடி என்று வைரலாகும் தினகரன் செய்தி 2017ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் வெளியானது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.