சொந்த பந்தங்களிடம் கூட தலை காட்ட முடியவில்லை என்று கூறினாரா அண்ணாமலையின் மனைவி அகிலா?

நண்பர்கள் பணத்தில் அண்ணாமலை குடும்பம் நடத்தி வரும் நிலையில், சொந்த பந்தங்களிடம் கூட தலை காட்ட முடியவில்லை என்று அவரது மனைவி அகிலா கூறியதாக தந்தி டிவியின் நியூஸ் கார்ட் ஒன்று வைரலாகி வருகிறது.

By Ahamed Ali  Published on  6 July 2023 12:58 PM GMT
சொந்த பந்தங்களிடம் கூட தலை காட்ட முடியவில்லை என்று கூறினாரா அண்ணாமலையின் மனைவி அகிலா?

சொந்த பந்தங்களிடம் கூட தலை காட்ட முடியவில்லை என்று அண்ணாமலையின் மனைவி கூறியதாக வைரலாகும் நியூஸ் கார்ட்

தனக்கான செலவுகளை தன் நண்பர்கள் செய்வதாக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்த நிலையில், "மனம் திறந்த அகிலா. சொந்த பந்தங்களிடம் கூட தலை காட்ட முடியவில்லை. நண்பர்கள் பணத்தில் அண்ணாமலை குடும்பம் நடத்திவரும் நிலையில் மனைவி அகிலா பேட்டி" என்று கடந்த ஜூன் 30ஆம் தேதி தந்தி டிவி செய்தி வெளியிட்டதாக நியூஸ் கார்ட் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


வைரலாகும் காணொலி

Fact-check:

இதன் உண்மைத் தன்மையைக் கண்டறிவதற்காக முதலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் மனைவி இவ்வாறாக அளித்த பேட்டி ஏதும் ஊடகங்களில் செய்தியாக வெளியாகியுள்ளனவா என்று கூகுளில் தேடியபோது, அவ்வாறாக எந்த செய்தியும் வெளியாகவில்லை என்பது தெரியவந்தது.

தொடர்ந்து, தந்தி டிவியின் சமூக வலைதளப் பக்கங்களில் ஜூன் 30ஆம் தேதிக்கான பதிவுகளில் தேடினோம், அதிலும் வைரலாகும் செய்தி போன்று ஏதும் வெளியிடப்படவில்லை. மாறாக, "இந்த செய்தி தந்தி தொலைக்காட்சி வாயிலாக பகிரப்படவில்லை" என்று பரவும் செய்தி போலியானது என்று ஜூன் 30ஆம் தேதியே தந்தி டிவியின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கங்களில் பதிவிடப்பட்டுள்ளது.

தந்தி டிவியின் ஃபேஸ்புக் பதிவு

Conclusion:

இறுதியாக, சொந்த பந்தங்களிடம் கூட தலை காட்ட முடியவில்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் மனைவி அகிலா கூறியதாக வைரலாகும் தந்தி டிவியின் நியூஸ் கார்ட் போலியானது என்று நம்மால் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Claim Review:Thanthi TV news card claiming that BJP Annamalai's wife Akila, said that she could not show her head even to her own relatives
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook, Twitter
Claim Fact Check:False
Next Story