"குழந்தை இல்லையா? கர்த்தர் முன் கலவி கொள்ளுங்கள்.! குழந்தை வேண்டும் என்பதற்காக தேவாலயத்தில் கர்த்தர் முன் உடலுறவு கொள்ளும் தம்பதியினர்..!" என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், "சிவப்பு துணியால் மூடப்பட்ட இரண்டு பேர் ஒருவர் மீது ஒருவர் படுத்துள்ளனர். அவர்களுக்கு பின்னால் இருப்பவர்கள், தங்கள் கைகளை உயர்த்தியுள்ளனர்"
Fact-check:
இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிய வைரலாகும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, இது பிரேசிலில் உள்ள தேவாலயத்தில் நடைபெற்ற சம்பவம் என்றும் இதே புகைப்படம் பல்வேறு பகுதிகளில் வைரலானதும் தெரிய வந்தது. இதுகுறித்து சம்பவம் நடைபெற்ற Alianc Restaurada என்ற தேவாலயம் விளக்கம் ஒன்றையும் அளித்துள்ளது.
Alianç Restauradaவின் ஃபேஸ்புக் பதிவு
அதன்படி, பெண் பிஷப் Thais நடந்த சம்பவத்தை விளக்கி ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள காணொலியில், "புகைப்படத்தில் இருப்பது ஒரு ஆண், ஒரு பெண் என்று கூறுவது தவறு. அதில், இருக்கும் இருவரும் பெண்கள் தான். அதில் இருக்கும் ஒரு பெண் மத போதகரான Domingas நோயுற்று தேவாலயத்திற்கு வந்ததாகவும், பிரசங்கத்தின் போது அவர் மயங்கி விழுந்ததாகவும்" அவர்கள் தெரிவித்தனர்.
இதன் காரணமாக, பிரசங்கத்திற்குப் பிறகு, போதகரான Icaro நோய்வாய்ப்பட்ட பெண்ணை அழைத்து "இந்த தீர்க்கதரிசன செயலைச்(வைரலாகும் புகைப்படத்தில் இருப்பது போன்று) செய்தார்", நோய்வாய்ப்பட்ட பெண்ணின் மேல் ஒரு பெண் போதகரை படுக்க வைப்பது பைபிள் வசனத்தின் அடிப்படையிலானது" என்று தெரிவித்துள்ளனர்.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக topnaijanews, melodyinter உள்பட பல்வேறு ஊடகங்கள் இச்சம்பவத்தை செய்தியாகவும் வெளியிட்டுள்ளன.
Conclusion:
இறுதியாக, குழந்தை இல்லை என்பதற்காக தேவாலயத்தினுள் உடலுறவு வைத்துக் கொண்டதாக பகிரப்படும் புகைப்படத்தில் உண்மை இல்லை. அதில் இருப்பவர்கள் பெண்கள் என்றும் அது ஒரு வகையான மதச்சடங்கு என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.