Fact Check:மூன்று மாதங்கள் இலவச ரீசார்ஜ் வழங்கும் TRAI: உண்மை என்ன?

TRAI மூன்று மாதங்கள் இலவச ரீசார்ஜ் வழங்குவதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் இணைய லிங்க்

By Ahamed Ali  Published on  26 July 2024 6:32 PM GMT
Fact Check:மூன்று மாதங்கள் இலவச ரீசார்ஜ் வழங்கும் TRAI: உண்மை என்ன?
Claim: TRAI மூன்று மாதங்கள் இலவச ரீசார்ஜ் வழங்குவதாக வைரலாகும் இணைய லிங்க்
Fact: இது போலி என்று TRAI மறுத்துள்ளது

இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) மூன்று மாதங்கள் இலவச ரீசார்ஜ் வழங்குவதாக இணையதள லிங்க்(https://trai.gov.in@lhoff.cyou?free-recharge-offer=91721848234348) ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது


வைரலாகும் இணைய லிங்க்

Fact-check:

நியூஸ் மீட்டரின் ஆய்வில் இத்தகவல் ஸ்பேம் என்பது தெரியவந்தது. இதன் உண்மை தன்மையை கண்டறிய இதுகுறித்து கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, Times of India நேற்று இது தொடர்பாக செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதன்படி, “TRAI இலவச மொபைல் ரீசார்ஜ் வழங்குவதாக வைரலாகும் தகவல் போலி என்று PIB Fact Check தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக TRAIயும் தனது எக்ஸ் பக்கத்தில், வைரலாகும் தகவல் போலி என்று பதிவிட்டுள்ளது. அதனை அடிப்படையாகக் கொண்டு PIB Fact Checkம் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. தொடர்ந்து, வைரலாகும் இணைய லிங்கை ஆய்வு செய்ததில் வைரலாகும் லிங்கை கிலிக் செய்து பார்த்தபோது, https://luckyj.cyou/#1722017606426 என்று மாறிவிடுகிறது. அதேசமயம், TRAIன் அதிகாரப்பூர்வ இணையதளம் https://trai.gov.in/ என்பது தெரியவந்தது. இதன் மூலம் வைரலாகும் லிங்க் ஒரு ஸ்பேம் என்பது தெரியவந்தது.

Conclusion:

நம் தேடலின் முடிவாக இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) மூன்று மாதங்கள் இலவச ரீசார்ஜ் வழங்குவதாக வைரலாகும் இணைய லிங்க் போலி என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Claim Review:இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் மூன்று மாதங்கள் இலவச ரீசார்ஜ் வழங்குகிறது
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook, WhatsApp
Claim Fact Check:False
Fact:இது போலி என்று TRAI மறுத்துள்ளது
Next Story