"ஹமாஸ் முழு ஆயத்துடனேயே போரை ஆரம்பித்துள்ளது. இது இஸ்ரேலிய விமானம் சூட்டு வீழ்த்தும் காட்சி" என்ற கேப்ஷனுடன் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், இரு ஹெலிகாப்டர்கள் சுட்டு வீழ்த்தப்படும் காட்சி பதிவாகியுள்ளது.
வைரலாகும் காணொலி
Fact-check:
முதற்கட்டமாக இதுகுறித்து எக்ஸ் தளத்தில் தேடிய போது வைரலாகும் காணொலியின் ஆங்கிலப் பதிவில் சிலர் இது "Arma 3" என்ற கம்யூட்டர் கேம் என்று கமெண்ட் செய்திருந்தனர். இதனை அடிப்படையாகக் கொண்டு யூடியூபில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம்.
Arma 3 என்று கமெண்ட் செய்துள்ள எக்ஸ் பயனர்
அப்போது, KazinkkaWarrior என்ற யூடியூப் சேனலில் "Two combat helicopters shot down by anti aircraft defense - Arma" என்ற தலைப்புடன் வைரலாகும் அதே காணொலி பதிவாகி இருந்தது. மேலும், அதன் டிஷ்க்ரிப்ஷன் பகுதியில், "இது உண்மை அல்ல, உருவாக்கப்பட்ட(Simulation) காணொலி மட்டுமே" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உருவாக்கப்பட்ட(Simulation) காணொலி என்று குறிப்பிடப்பட்டுள்ள யூடியூப் டிஷ்க்ரிப்ஷன்
Conclusion:
நம் தேடலின் முடிவாக ஹமாஸ் படையினர் இஸ்ரேலிய ராணுவ விமானத்தை சுட்டு வீழ்த்துவதாக வைரலாகும் காணொலி உண்மையில் Arma என்ற கம்யூட்டர் கேமில் வரும் காணொலி என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.