உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்களை கேலி செய்தவர்களை அம்மாநில காவல்துறையினர் பொதுவெளியில் வைத்து சரமாரியாக தாக்குவதாக சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது.
Fact-check:
நியூஸ்மீட்டர் ஆய்வில் இத்தகவல் தவறானது என்றும் இச்சம்பவம் 2015ஆம் ஆண்டு மத்தியப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்றதும் தெரியவந்தது.
வைரலாகும் காணொலியில் உள்ள சம்பவம் உண்மையில் உத்தரபிரதேசத்தில் நடைபெற்றது தானா என்பதை கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, 2015ஆம் ஆண்டு மே 29ஆம் தேதி ABP ஊடகம் வைரலாகும் காணொலியுடன் செய்து வெளியிட்டிருந்தது. அதில், “இந்தூர் காவல்துறை குற்றவாளிகளை சாலையில் வைத்து பகிரங்கமாக தாக்குவதாக” குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், நகரில் அதிகரித்து வரும் குற்ற விகிதத்தை தடுக்க இந்தூர் காவல்துறை முழு பலத்துடன் களமிறங்கியுள்ளனர். காவல்துறையினர் குற்றவாளிகளை வெளியே இழுத்து நகரின் முக்கிய பகுதிகளில் பொதுமக்கள் முன்னிலையில் வைத்து அடித்ததாக
Aaj Tak 2015ஆம் ஆண்டு வைரலாகும் காணொலியுடன் செய்தி வெளியிட்டுள்ளது. இதே செய்தியை
IndiaTV ஊடகமும் வெளியிட்டுள்ளது.
நம் தேடலின் முடிவாக பெண்களை கேலி செய்தவர்களை உத்தரப்பிரதேச காவல்துறையினர் பொதுவெளியில் வைத்து சரமாரியாக தாக்குவதாக வைரலாகும் காணொலி 2015ஆம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற நிகழ்வு என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.