இமயமலையில் உருவாகி உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், பீகார் உள்பட பல மாநிலங்களின் வழியாக பாய்ந்து செல்லும் கங்கை ஆறு இறுதியாக வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. இந்நிலையில், கங்கை இறங்கும் அற்புதக் காட்சி என்று கூறி காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், மலையின் மீது பல சிறிய அளவிலான அருவிகளைப் போன்ற அமைப்பில் இருந்து நீர் வடிகிறது.
வைரலாகும் காணொலி
Fact-check:
இதன் உண்மைத் தன்மையைக் கண்டறிய முதலில் காணொலியில் இருக்கும் வாகனங்களின் பதிவெண்ணை ஆய்வு செய்தபோது அதில் இருப்பவை இந்திய வாகனங்கள் இல்லை என்பது தெரியவந்தது.
தொடர்ந்து, காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, RM Videos என்ற யூடியூப் சேனல் வைரலாகும் காணொலியை ஒத்த ஒரு காணொலியை Thousand Waterfalls என்ற தலைப்பில் பதிவிட்டிருந்தது. அதன் கமெண்ட் பகுதியில் பயனர் ஒருவர் "காணொலியில் இருப்பது நியூசிலாந்தின் மில்ஃபோர்ட் சவுண்ட்" என்று பதிவிட்டிருந்தார்.
கிடைத்த தகவலின் அடிப்படையில் யூடியூபில் தேடுகையில், "NZ Pocket Guide" என்ற யூடியூப் சேனலில் வைரலாகக்கூடிய இடத்தில் எடுக்கப்பட்ட காணொலி ஒன்று "The road to Milford Sound…" என்ற தலைப்பில் பதிவிடப்பட்டிருந்தது. அக்காணொலியின் 5:20வது பக்கத்தில் மில்ஃபோர்ட் சவுண்ட் சாலையில் உள்ள ‘Homer Tunnel’ பற்றிக் குறிப்பிடப்படுகிறது. அந்த சுரங்கப் பாதைக்கு வெளியே உள்ள சிக்னலில் காத்திருக்கும் போது அருகில் உள்ள மலையில் இருந்து நீர் வடியும் காட்சிகள் பதிவாகியுள்ளது. அந்த இடம் பரவக் கூடிய காணொலியில் உள்ள இடத்துடன் ஒத்துப் போகிறது. மேலும், அவ்விடத்தை Thousand Waterfalls என்றும் அழைக்கின்றனர்.
NZ Pocket Guide யூடியூப் சேனலின் பதிவு
Conclusion:
நமது தேடலின் முடிவாக கங்கை இறங்கும் காட்சி என்று வைரலாகும் காணொலி உண்மையில் நியூசிலாந்தின் மில்ஃபோர்ட் சவுண்டில் உள்ள Thousand Waterfalls என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.