அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சமீப காலமாகவே தொடர்ந்து சரிந்து வருகிறது. இச்சூழலில், "ரூபாயின் வீழ்ச்சி மகிழ்ச்சியளிக்கிறது" என்றும், "ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு வெளிநாட்டு வாழ் இந்துக்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களிடம் இருந்து தான் அதிக நிதி வருகிறது. ரூபாயின் வீழ்ச்சியால் நமக்கு வரும் நிதி அதிகரிக்கும். நாகர்கோவிலில் நடந்த ஷாகா கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு" என்று ஆர்எஸ்எஸின் தலைவர் பேசியது போன்று விகடன்(ஜூனியர் விகடன்) நியூஸ் கார்ட் வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜூலை மாதம் 17-ம் தேதியிடப்பட்ட அந்த நியூஸ் கார்ட் அச்சமயம் வைரலான நிலையில், மீண்டும் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
Fact-check:
இந்நிலையில், பகிரப்பட்டு வரும் இத்தகவலின் உண்மைத் தன்மை குறித்து கண்டறிய அதில் இருக்கக்கூடிய செய்தியை கூகுளில் தேடினோம். அன்றைய தேதியில் அப்படி ஒரு செய்தியை விகடன் உள்ளிட்ட எந்த ஒரு செய்தி நிறுவனமும் பிரசுரிக்கவில்லை என்பது தெளிவானது. மேலும், விகடனின் சமூக வலைதள பக்கங்களில் பார்த்த போது இது போன்ற எந்தவொரு நியூஸ் கார்டையும் விகடன் நிறுவனம் வெளியிடவில்லை என்பது உறுதியானது.
Conclusion:
இறுதியாக, நம்முடைய தேடலின் மூலம் பகிரப்பட்டு வரும் விகடன் நியூஸ் கார்ட் போலியானது என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க முடிகிறது. எனவே இந்த நியூஸ் கார்டை சமூக வலைதளப் பயனர்கள் மேலும் பகிர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.