Fact Check: வைரலாகும் சீமானின் வீட்டின் புகைப்படம்; உண்மை என்ன?

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் வீடு என்று சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது

By Ahamed Ali  Published on  17 July 2024 6:51 PM GMT
Fact Check: வைரலாகும் சீமானின் வீட்டின் புகைப்படம்; உண்மை என்ன?
Claim: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் வீடு என்று வைரலாகும் புகைப்படம்
Fact: வைரலாகும் புகைப்படம் இணையதளத்தில் உள்ள வீடுகளில் மாதிரி புகைப்படம்

“ஈழத்திற்காக தீக்குளித்தவன் வீடும். அதை வைத்து மஞ்சள் குளித்தவன் வீடும்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் வீடு என்று வீட்டின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


வைரலாகும் பதிவு

Fact-check:

நியூஸ்மீட்டரின் ஆய்வில் சீமானின் வீடு என்று வைரலாகும் புகைப்படம் இணையதளத்தில் உள்ள வீடுகளில் மாதிரி புகைப்படங்கள் என்பது தெரியவந்தது. இப்புகைப்படத்தின் உண்மை தன்மையை கண்டறிய அதனை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம்.

அப்போது, வைரலாகும் புகைப்படத்தில் உள்ள வீட்டின் புகைப்படம் வீடு கட்ட பயன்படுத்தப்படும் மாதிரி புகைப்படங்கள் என்பது தெரியவந்தது. இதனை Pinterest, Engineering Discoveries, kwentongofw உள்ளிட்ட பல்வேறு இணையதளத்தில் வைரலாகும் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது.

மேலும், சீமானின் வீடு குறித்து தேடுகையில், 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி நக்கீரன் செய்தி வெளியிட்டிருந்தது. அதில், “தனிநபர் வருமானம் உயர்ந்து விட்டதாக கூறுகிறார்கள். ஆனால் நானே வீட்டு வாடகை செலுத்த கஷ்டப்படுகிறேன்” என்று சீமான் கூறியுள்ளார். இதன் மூலம் அவர் வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறார் என்பது தெரியவருகிறது. அதே சமயம் அவரது வீட்டின் சரியான புகைப்படங்கள் எதுவும் இணையதளத்தில் இல்லை என்பதும் நம் தேடலில் தெரியவருகிறது.

Conclusion:

நம் தேடலின் முடிவில் சீமானின் வீடு என்று சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம் இணையதளத்தில் உள்ள வீடுகளில் மாதிரி புகைப்படங்கள் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Claim Review:சீமானின் வீடு என்று வைரலாகும் புகைப்படம்
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook
Claim Fact Check:False
Fact:வைரலாகும் புகைப்படம் இணையதளத்தில் உள்ள வீடுகளில் மாதிரி புகைப்படம்
Next Story