Fact Check: பாமக ராமதாஸின் புகைப்படத்துடன் ‘If you are bad I am your dad’ என்ற வார்த்தை இடம்பெற்றுள்ள பதாகை வைரல்? உண்மை அறிக

பாமக நிறுவனர் ராமதாஸின் புகைப்படத்துடன் “If you are bad I am your dad“ என்று குறிப்பிடப்பட்டுள்ள பதாகையை பாமக தொண்டர்கள் இருவர் கையில் வைத்திருந்ததாக புகைப்படம் வைரலாகி வருகிறது

By Ahamed Ali
Published on : 11 Aug 2025 7:40 PM IST

Fact Check: பாமக ராமதாஸின் புகைப்படத்துடன் ‘If you are bad I am your dad’ என்ற வார்த்தை இடம்பெற்றுள்ள பதாகை வைரல்? உண்மை அறிக
Claim:“If you are bad I am your dad“ என்று குறிப்பிடப்பட்டுள்ள பதாகையில் இடம்பெற்றுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் புகைப்படம்
Fact:இத்தகவல் தவறானது. வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டுள்ளது

வன்னியர் சங்கம் சார்பில் 8வது மகளிர் பெருவிழா மாநாடு நேற்று (ஆகஸ்ட் 10) பூம்புகாரில் நடைபெற்றது. இம்மாநாட்டில் பாமக தொண்டர்கள் இருவர் வைத்துள்ள பதாகை ஒன்றில், “If you are bad I am your dad“ என்று குறிப்பிட்டு பாமக நிறுவனர் ராமதாஸின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. இதனை அக்கட்சியினர் சமூக வலைதளங்களில் (Archive) பரப்பி வருகின்றனர்.


வைரலாகும் புகைப்படம்

Fact-check:

நியூஸ் மீட்டரின் ஆய்வில் வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

வைரலாகும் புகைப்படத்தின் உண்மை தன்மையை கண்டறிய அதனை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, பித்தன் என்ற எக்ஸ் பயனர் உண்மையான புகைப்படம் என்று கூறி ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில், மறைந்த பாமக நிர்வாகி மற்றும் எம்எல்ஏ காடுவெட்டி குருவின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

தொடர்ந்து, தேடுகையில் Paattali Magan/பாட்டாளி மகன் என்ற எக்ஸ் பயனரும் காடுவெட்டி குரு இடம்பெற்றுள்ள அதே புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மேலும், வைரலாகும் புகைப்படம் உண்மையில் எடிட் செய்யப்பட்டது தானா என்று கண்டறிய அதனை Foto Forensics இணையதளத்தில் பதிவேற்றி ஆய்வு செய்தோம். அப்போது, அது எடிட் செய்யப்பட்ட புகைப்படம் தான் என்று உறுதியானது.


Conclusion:

நம் தேடலின் முடிவாக பாமக தொண்டர்கள் இருவர் கையில் வைத்திருந்த பதாகையில் பாமக நிறுவனர் ராமதாஸின் புகைப்படத்துடன் “If you are bad I am your dad“ என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்றும் உண்மையான புகைப்படத்தில் காடுவெட்டி குருவின் புகைப்படம் மட்டும் இருப்பது தெரியவந்தது.

Claim Review:பாமக நிறுவனர் ராமதாஸின் புகைப்படத்துடன் “If you are bad, I am your dad” எனும் பதாகை ஏந்திய இரு பாமக தொண்டர்களின் படம் வைரல்
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook, X
Claim Fact Check:False
Fact:இத்தகவல் தவறானது. வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டுள்ளது
Next Story