“திருமணத்தை மறைத்த திருடனின் திருமண போட்டாவை திருடியாச்சு.. ஏழை மாமியாவின் மருமகன் நீ எதுக்காக நடந்த திருமணத்தை மறச்ச? உனக்கு பொண்ணு பிடிக்காதா? ஓஹோ அவனா நீ?” என்ற கேப்ஷனுடன் பிரதமர் நரேந்திர மோடி மணப்பெண் ஒருவருடன் அருகில் நிற்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் இருப்பவர் பிரதமரின் மோடியின் மனைவி யெசோதா பென் என்றும் இது அவர்களின் திருமண புகைப்படம் என்றும் கூறி பரப்பி வருகின்றனர்.
Fact-check:
இப்புகைப்படத்தின் உண்மை தன்மையை கண்டறிய இது தொடர்பாக கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, Whatzz AAP என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் 2014ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி வைரலாகும் அதே புகைப்படம் பதிவிடப்பட்டிருந்தது. அதில், “படத்தில் இருக்கும் பெண் சூரத்தின் முன்னாள் அமைச்சர் ஹேமந்த் சபத்வாலாவின் மகள். பல ஆண்டுகளுக்கு முன் அவரது திருமணத்தின் போது எடுக்கப்பட்டது, அவர் மோடிக்கு தங்கை போன்றவர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இதனை உறுதிப்படுத்தும் விதமாக அதே தேதியில், ஹேமந்த் சபத்வாலாவின் மகன் கெயுர் ஹேமந்த் சபத்வாலா, “1994ஆம் ஆண்டு நடைபெற்ற எனது சகோதரியின் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட மோடியின் புகைப்படம். சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரவி வருவதால் இதனை பதிவிடுகிறேன்” என்று கூறி ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர், தனது சகோதரியுடன் இருக்கும் புகைப்படத்தையும் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதனையும் வைரலாகும் புகைப்படத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கையில் இரு புகைப்படத்தில் இருப்பதும் ஒரே நபர் தான் என்பதும் தெரியவந்தது.
குஜராத் முன்னாள் அமைச்சரின் மகள்
Conclusion:
நம் தேடலில் முடிவாக பிரதமர் நரேந்திர மோடியின் திருமண புகைப்படம் என்று சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படத்தில் இருப்பது குஜராத்தின் முன்னால் அமைச்சர் ஹேமந்த் சபத்வாலாவின் மகள் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.