“போன் பேசிக்கொண்டே பெற்ற பிள்ளைய பிரிட்ஜில் வைத்த தாய் போனினால் உலகம் இப்படியும் போய்க்கொண்டிருக்கிறது” என்ற கேப்ஷனுடன் சிசிடிவி காட்சி போன்ற காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், பெண் ஒருவர் போன் பேசிக்கொண்டு தன்னை அறியாமல் தனது குழந்தையை பிரிட்ஜில் வைத்து மூடும் காட்சி பதிவாகியுள்ளது.
வைரலாகும் காணொலி
Fact-check:
முதலில் அக்காணொலியை பார்ப்பதற்கு விழிப்புணர்விற்காக எடுக்கப்பட்டது போன்று இருந்தது. தொடர்ந்து, அதன் உண்மைத்தன்மையைக் கண்டறிய குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, நடிகை Sanjjanaa Galrani தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இதே காணொலியை கடந்த மார்ச் மாதம் பதிவிட்டுள்ளார்.
அதன் டிஸ்கிரிப்ஷன் பகுதியில், “இந்தப் பக்கத்தில் ஸ்கிரிப்ட் செய்யப்பட்ட நாடகங்கள் உள்ளது என்பதை நினைவில் கொள்ளவும். இந்த குறும்படங்கள் பொழுதுபோக்கு மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே! இந்த காணொலியில் வரும் கதாபாத்திரங்களும் பொழுதுபோக்கு மற்றும் கல்வி நோக்கத்திற்காக உள்ளன” என்று கூறப்பட்டுள்ளது.
இதனைக்கொண்டு இக்காணொலி விழிப்புணர்வுக்காக எடுக்கப்பட்டது என்பதை நம்மால் கூற முடிகிறது. மேலும், வைரலாகும் காணொலியில் இருக்கும் அதே பெண் நடித்திருக்கும் பல்வேறு(பதிவு 1, பதிவு 2) சமூக விழிப்புணர்வு காணொலிகளும் அதே பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக போன் பேசிக்கொண்டே பெண் ஒருவர் குழந்தையை பிரிட்ஜில் வைப்பது போன்று சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி விழிப்புணர்வுக்காக எடுக்கப்பட்டது என்றும் அது உண்மையில் நடைபெற்ற சம்பவம் இல்லை என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.