உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த 13ஆம் தேதி பொதுக் குழாயில் குடிநீர் அருந்தினார் என்று புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில்(
Archive link) வைரலாகி வருகிறது.
Fact-check:
இப்புகைப்படத்தின் உண்மைத் தன்மையைக் கண்டறிவதற்காக அதனை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்தோம். அப்போது, இதே புகைப்படத்தில் குடிநீர் குழாய்க்கு பதிலாக மாடை வைத்து எடிட் செய்து யோகி ஆதித்யநாத் கோமியத்தை குடித்தார் என்று 2020ஆம் ஆண்டு வைரலானது தெரியவந்தது.
தொடர்ந்து தேடுகையில், "கோரக்பூர் எம்.பி மற்றும் வருங்கால முதல்வர் (உ.பி.) யோகி ஆதித்யநாத் ஜி, எளிமைக்கு உதாரணம்---- புகைப்பட உபயம் ஹர்கோவிந்த் பிரவா ஜி"(மொழிபெயர்ப்பு) என்ற இந்தி கேப்ஷனுடன் பயனர் ஒருவர் கடந்த 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி தற்போது வைரலாகும் அதே புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
2016ஆம் ஆண்டின் டுவிட்டர் பதிவு
உத்தரப்பிரதேசத்தில் பாஜக வெற்றி பெற்று முதலமைச்சராக யோகி ஆதித்யநாத்
2017ம் ஆண்டு தான் முதல் முறையாக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அவர் கோரக்பூர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தற்போது முதலமைச்சரான பிறகு எடுக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் தவறாக பரப்பி வருகின்றனர்.
Conclusion:
நமது தேடலில் முடிவாக தற்போது வைரலாகும் புகைப்படம் ஏற்கனவே யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது. மேலும், அவர் முதலமைச்சரான பிறகு எடுக்கப்பட்டதாக தற்போது தவறாக பரப்பி வருகின்றனர்.