பிரதமர் நரேந்திர மோடி சிவப்பு நிற உடை அணிந்துள்ள புகைப்படத்துடன், அவர் விதவிதமாக உடைகள் அணிந்து வருவதாக கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில்(Archive link) புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
Fact-check:
புகைப்படத்தின் உண்மை தன்மையை கண்டறிவதற்காக அதனை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, பௌருஷ் ஷர்மா(Paurush Sharma) என்பவர் தனது யூடியூப் சேனலில், கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி காணொலி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், 8:20 முதலான பகுதிகளில் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் என்று தற்போது வைரலாகும் புகைப்படம் குறித்து விவரிக்கிறார். மேலும், ராகுல் காந்தி, லாலு பிரசாத் யாதவ், அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி உள்ளிட்டோரின் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் குறித்தும் அக்காணொலியில் விவரிக்கப்பட்டுள்ளது.
பௌருஷ் ஷர்மா வெளியிட்டுள்ள காணொலி
தொடர்ந்து, டுவிட்டர் பயனர் ஒருவர், "AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட நரேந்திர மோடியின் புகைப்படம்" என்று கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி வைரலாகும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இறுதியாக, ஹைவ் மாடரேஷன்(Hive Moderation) என்ற செயற்கை நுண்ணறிவு தகவல்களை பகுப்பாய்வு செய்யும் இணையதளத்தில் வைரலாகும் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து ஆய்வு செய்தோம். அதில், அப்புகைப்படம் 87.4 விழுக்காடு செயற்கை நுண்ணறிவைக் கொண்டு உருவாக்கப்பட்டது என்று முடிவுகள் கிடைத்தது. இதே போன்று குளியல் தொட்டியில் இரு பெண்களுடன் போப் பிரான்சிஸ் இருப்பது போன்ற AI புகைப்படம் தொடர்பாக நியூஸ் மீட்டர் ஃபேக்ட்செக் கட்டுரை வெளியிட்டுள்ளது.
ஹைவ் மாடரேஷன் பகுப்பாய்வு முடிவுகள்
Conclusion:
நமது தேடலின் மூலம் வைரலாகும் புகைப்படம் செயற்கை நுண்ணறிவைக் கொண்டு உருவாக்கப்பட்டது என்பதை கிடைத்திருக்கக்கூடிய ஆதாரங்களின் அடிப்படையில் உறுதிப்படுத்த முடிகிறது.